ADDED : ஜூலை 05, 2024 02:07 AM
பொள்ளாச்சி:ஆனைமலை அருகே கோடங்கிப்பட்டி குருசாமியர் விநாயகர் மற்றும் கருப்பராயன், கன்னிமார், காலபைரவர் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது.
இதையடுத்து, கோவிலில் தற்போது இரண்டாம் ஆண்டு விழா வரும், 7ம் தேதி நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு மேல் மதியம், 12:30 மணிக்குள், சுவாமிகளுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.