/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹிந்துஸ்தான் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா ஹிந்துஸ்தான் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா
ஹிந்துஸ்தான் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா
ஹிந்துஸ்தான் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா
ஹிந்துஸ்தான் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 24, 2024 12:49 AM

போத்தனூர்:ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியின், 12வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.
ஹிந்துஸ்தான் கல்வி குழும செயலாளர் பிரியா தலைமை வகித்தார். பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தின் பெங்களூரு இன்போசிஸ் நிறுவன மூத்த பயிற்சி வழிகாட்டு அலுவலர் ஷாலினி பேசுகையில், கடின உழைப்பே ஒருவரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். வேலை, சம்பளம் என்பதை தாண்டி, நமக்கு கிடைக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். கற்க வாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெற்றோரை, என்றும் மறக்க கூடாது, என்றார்.
தொடர்ந்து, தர வரிசையில் இடம் பிடித்த ஏழு மாணவர்களுக்கு தங்க பதக்கத்துடன் பட்டச் சான்றிதழும், 505 பேருக்கு பட்ட சான்றிதழையும் வழங்கினார்.
முன்னதாக, ஹிந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் பேசினர். முதல்வர் நடராஜன் வரவேற்றார்.