ADDED : செப் 14, 2025 10:44 PM
நந்தம்பாக்கம்,;பகலில் வீடு புகுந்து, மொபைல் போன்கள் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
நந்தம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார், 28. ஓட்டுநர். நேற்று முன்தினம், இவரது தாய் அங்கம்மாள், வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது, ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறுவதை பார்த்து, சத்தம் போட்டார்.
அந்த நபர், சுவர் ஏறி குதித்து தப்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூன்று மொபைல் போன்கள் திருடப்பட்டிருந்தன.
நந்தம்பாக்கம் போலீசார் விசாரணையில், நந்தம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ், 27, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
அவரை நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.