/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பீச் வாலிபால்: டி.இ.எல்.சி., பள்ளி முதலிடம் பீச் வாலிபால்: டி.இ.எல்.சி., பள்ளி முதலிடம்
பீச் வாலிபால்: டி.இ.எல்.சி., பள்ளி முதலிடம்
பீச் வாலிபால்: டி.இ.எல்.சி., பள்ளி முதலிடம்
பீச் வாலிபால்: டி.இ.எல்.சி., பள்ளி முதலிடம்
ADDED : செப் 14, 2025 10:47 PM

சென்னை:பள்ளிக் கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான மாணவியர் பீச் வாலிபால் போட்டியில், புரசைவாக்கம் டி.இ.எல்.சி., பள்ளி முதலிடத்தை பிடித்தது.
பள்ளிக்கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான மாணவியர் பீச் வாலிபால் போட்டிகள், செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், அமைந்தகரையில் நடந்தன. போட்டியில், 20க்கும் மேற்பட்ட மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள் மோதின.
இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், முதல் அரையிறுதியில் புரசைவாக்கம் டி.இ.எல்.சி., பள்ளி, 15 - 4, 15 - 10 என்ற செட் கணக்கில் அசோக் நகர் அரசு பள்ளியை வீழ்த்தியது.
மற்றொரு அரையிறுதியில், அடையார் லேடி சிவசாமி பள்ளி, 15 - 7, 15 - 3 என்ற செட் கணக்கில், தேனாம்பேட்டை ராணி மெய்யம்மை அணியை தோற்கடித்தது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், புரசைவாக்கம் டி.இ.எல்.சி., அணி, 17 - 15, 15 - 10 என்ற கணக்கில், அடையார் லேடி சிவசாமி பள்ளி அணியை வீழ்த்தி, முதலிடத்தை தட்டிச் சென்றது.
மூன்றாம் இடத்தை, அசோக் நகர் அரசு பள்ளி, 15 - 7, 15 - 5 என்ற செட் கணக்கில், தண்டையார்பேட்டை முருகா தனுஷ்கோடி பள்ளியை தோற்கடித்து வென்றது.
அதேபோல், 19 வயது பிரிவினருக்கான இறுதிப் போட்டியில், புரசைவாக்கம் டி.இ.எல்.சி., பள்ளி மற்றும் பெரம்பூர் எம்.எச்., சாலை அரசு பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 15 - 7, 15 - 6 என்ற செட் கணக்கில்டி.இ.எல்.சி., பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தை வென்றது.