/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓடும் ரயிலில் போன் பறித்த வாலிபர் கைது ஓடும் ரயிலில் போன் பறித்த வாலிபர் கைது
ஓடும் ரயிலில் போன் பறித்த வாலிபர் கைது
ஓடும் ரயிலில் போன் பறித்த வாலிபர் கைது
ஓடும் ரயிலில் போன் பறித்த வாலிபர் கைது
ADDED : ஜூன் 09, 2025 01:58 AM

பெரம்பூர்:வேலுார் மாவட்டம், காட்பாடி, கீழ் வடுகன் குட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஜீவன் சிங், 43. இவர், கடந்த 6ம் தேதி இரவு, தன்பாத் விரைவு ரயிலில், கதவின் ஓரமாக அமர்ந்தவாறு, சென்னை சென்ட்ரலுக்கு வந்து கொண்டிருந்தார்.
வியாசர்பாடி - பேசின் பாலம் இடையே ரயில் மெதுவாக சென்றபோது, அவரது 'சாம்சங்' மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் பறித்து தப்பினார்.
இதுகுறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி செய்த வியாசர்பாடி, திடீர் நகரைச் சேர்ந்த சிவகாசி, 20, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.