/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரெட்டேரி மேம்பாட்டு பணி 2 மாதத்தில் முடிக்க திட்டம் ரெட்டேரி மேம்பாட்டு பணி 2 மாதத்தில் முடிக்க திட்டம்
ரெட்டேரி மேம்பாட்டு பணி 2 மாதத்தில் முடிக்க திட்டம்
ரெட்டேரி மேம்பாட்டு பணி 2 மாதத்தில் முடிக்க திட்டம்
ரெட்டேரி மேம்பாட்டு பணி 2 மாதத்தில் முடிக்க திட்டம்
ADDED : ஜூன் 09, 2025 01:57 AM

மாதவரம்:ரெட்டேரி மேம்பாட்டு பணிகள் 43.19 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதில், ஏரியை துார் வாரி கரை அமைத்தல், தடுப்புச்சுவர், உபரிநீர் கூடுதலாக வெளியேற்ற ரெகுலேட்டர் அமைத்தல், மணல் திட்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 2,300 மீ., நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த சீரமைப்பு பணிக்கு பின், ரெட்டேரியில் 45 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். இதற்கு முன் 32 மில்லியன் கன அடி சேமிக்க முடிந்தது.
தற்போது எம்.ஜி.ஆர்.,நகர் அருகே உள்ள ரெட்டேரியின் கரைப்பகுதியில் நிழற்குடைகள் அமைத்தல், சாலை மற்றும் கரையோரம் நடைபாலம் அமைக்கும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அடுத்த இரண்டு மாதங்களில், அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரெட்டேரி சென்னையின் புதிய பொழுதுபோக்கு தலமாக மாற உள்ளது.