ADDED : செப் 06, 2025 12:37 AM
கொடுங்கையூர் செம்மஞ்சேரியைச் சேர்ந்த 20 வயது மாணவியும், பாலவாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ், 21, என்பவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
யுவராஜின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், மாணவி அவரை பிரிந்தார். கொடுங்கையூர், சிவசங்கரன் தெருவில் நேற்று மாணவி நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த யுவராஜ், தலையில் கத்தியால் வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசார், யுவராஜை கைது செய்தனர்.