ADDED : செப் 06, 2025 12:37 AM
சென்னை :தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, நகர பகுதியில் விற்க 'இயற்கை சந்தை' நடத்தப்படுகிறது.
வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் இந்த சந்தையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி, சிறுதானியம் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்கப்படும். பல்சுவை உணவுப் பொருட்களும் வாங்கி மக்கள் பயன்பெறலாம்.