/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபர் கைது வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
ADDED : செப் 11, 2025 02:32 AM
வண்ணாரப்பேட்டை, வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் ரவி, 66. கடந்த 24ம் தேதி ரவியின் மனைவி வேலைக்கு சென்ற நிலையில், ரவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் 'வீடு வாடகைக்கு உள்ளதா' எனக் கேட்டுள்ளார். திடீரென ரவி கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினார்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், ராமநாதபுரம், கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் வாஹித், 25, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் நேற்று அவரை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.