/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீருடை பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு சீருடை பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
சீருடை பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
சீருடை பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
சீருடை பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : செப் 11, 2025 02:31 AM
சென்னை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறப்பு காவலர், தீயணைப்பாளர் பணிக்கு, 3,665 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு, இணையவழியில் இம்மாதம், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு தயாராகும் மாணவ - மாணவியருக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், இலவச பயிற்சி வகுப்பு, நாளை துவங்குகிறது. இதேபோல், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர், தேர்விற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுடன், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.