/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சொத்து வரியை செப்., 30க்குள் செலுத்தி வட்டியை தவிர்க்கலாம் சொத்து வரியை செப்., 30க்குள் செலுத்தி வட்டியை தவிர்க்கலாம்
சொத்து வரியை செப்., 30க்குள் செலுத்தி வட்டியை தவிர்க்கலாம்
சொத்து வரியை செப்., 30க்குள் செலுத்தி வட்டியை தவிர்க்கலாம்
சொத்து வரியை செப்., 30க்குள் செலுத்தி வட்டியை தவிர்க்கலாம்
ADDED : செப் 13, 2025 02:08 AM
சென்னை, 'மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், தனி வட்டியை தவிர்க்க முடியும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, மாதந்தோறும் தனி வட்டி விதிக்கப்படும்.
சொத்து உரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை, மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ - சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் செலுத்த முடியும். மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட, அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும்.
அத்துடன், 'க்யூ ஆர் கோடு' வாயிலாகவும் மற்றும் வாட்ஸாப் வாயிலாக, 94450 61913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். எனவே, சொத்து வரியை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகர வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.