/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய இந்தோனேசியா ராணுவ விமானங்கள் சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய இந்தோனேசியா ராணுவ விமானங்கள்
சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய இந்தோனேசியா ராணுவ விமானங்கள்
சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய இந்தோனேசியா ராணுவ விமானங்கள்
சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய இந்தோனேசியா ராணுவ விமானங்கள்
ADDED : செப் 13, 2025 02:09 AM
சென்னை, இந்தோனேசியா நாட்டின் ராணுவ விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தோனேசியா நாட்டு ராணுவ விமானங்கள், நேற்று முன்தினம் அபுதாபிக்கு சென்று, பின் நேற்று மாலை இந்தோனேசியா நாட்டிற்கு திரும்பி கொண்டிருந்தன.
அந்நாட்டு ராணுவ விமானங்கள், நேற்று மாலை சென்னை வான்வெளியை கடந்து கொண்டிருந்தன. விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகள், ஓய்வு எடுப்பதாக முடிவு செய்தனர்.
பொதுவாக, வெளிநாட்டு 'கமர்சியல்' அல்லது ராணுவ விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க வேண்டுமெனில், நம் நாட்டு விமானப்படையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சிலவற்றுக்கு ஒப்பந்தங்களும் உள்ளன. தரையிறக்குவதற்கான நோக்கத்தை முறையாக தெரிவித்தால், அதற்கான வசதிகள் அரசால் செய்து தரப்படும்.
இதையடுத்து, டில்லியில் உள்ள இந்திய விமான விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட இந்தோனேசியா நாட்டு விமானிகள், சென்னையில் தரையிறக்க உடனடி அனுமதி கேட்டனர்.
அவர்களுக்கு, இந்திய விமானப்படை அதிகாரிகள் அனுமதி அளித்து, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாலை 6:30 மணிக்கு, விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. மொத்தம் ஐந்து விமானங்கள் வானில் பறந்ததாகவும், அதில் மூன்று விமானங்கள் மட்டும் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த விமானங்களில், 15க்கும் மேற்பட்ட இந்தோனேசிய ராணுவ வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு ஓய்வெடுத்த பின், நேற்று காலை 10:00 மணிக்கு, மீண்டும் விமானங்கள் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டன.