/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதல்வர் செல்வதற்காக தடுத்து நிறுத்தம் போலீசாரிடம் பெண்கள் ஆவேசம் முதல்வர் செல்வதற்காக தடுத்து நிறுத்தம் போலீசாரிடம் பெண்கள் ஆவேசம்
முதல்வர் செல்வதற்காக தடுத்து நிறுத்தம் போலீசாரிடம் பெண்கள் ஆவேசம்
முதல்வர் செல்வதற்காக தடுத்து நிறுத்தம் போலீசாரிடம் பெண்கள் ஆவேசம்
முதல்வர் செல்வதற்காக தடுத்து நிறுத்தம் போலீசாரிடம் பெண்கள் ஆவேசம்
ADDED : மே 21, 2025 12:49 AM

சென்னை :சென்னையில், டி.ஜி.பி., அலுவலகம் அருகே, ராணி மேரி கல்லுாரியில் 207.82 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித்துறை கட்டடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அங்கு 120.02 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் 42 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று காலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்றார். முதல்வரின் கான்வாய் வாகனங்கள் வருவதால், போலீசார், டி.ஜி.பி., அலுவலகம் அருகே, காமராஜர் சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சாலையை கடக்க முயன்ற, நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் தடுத்தார்.
மற்ற போலீசாரும் அவர்களை அந்த இடத்தில் இருந்து சற்று உள்ளே செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால், அவர்கள் ஆவேசமடைந்தனர்.
'நாங்களும் மனிதர்கள் தானே, எதற்காக இப்படி செய்கிறீர்கள். முதல்வர் வரும் வரை எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும். நீங்கள் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், சில நொடிகளில் சாலையை கடந்து இருப்போமே' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், போலீசார் அவர்களை சாலையை கடக்க அனுமதிக்கவில்லை.
முதல்வரின் கான்வாய் வாகனங்கள் அந்த இடத்தை கடந்த பின்னரே, வாகன ஓட்டிகளும், வாக்குவாதம் செய்த நபர்களும் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில்,' முதல்வரின் கான்வாய் வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தான் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால், போலீசாரின் கெடுபிடி காரணமாக இதுபோன்ற சம்பவம் நடந்து விடுகிறது' என்றனர்.
*