Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல்லாவரத்தில் எரியாத விளக்குகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

பல்லாவரத்தில் எரியாத விளக்குகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

பல்லாவரத்தில் எரியாத விளக்குகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

பல்லாவரத்தில் எரியாத விளக்குகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

ADDED : செப் 24, 2025 03:41 AM


Google News
பல்லாவரம் : பல்லாவரம் மேம்பாலத்தில், பல மின் விளக்குகள் எரியவில்லை. அதேபோல், பல கம்பங்களில் விளக்குகளே இல்லாததால், இரவில் கும்மிருட்டாக மாறி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை, மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மூலம் பராமரித்து வருகிறது. இதற்காக, மாதந்தோறும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தம் எடுத்து பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம், முறையாக பணிகளை செய்வதில்லை. இதனால், இரணியம்மன் கோவில் முதல் பல்லாவரம் வரை, ஜி.எஸ்.டி., சாலையில் பல விளக்குகள் எரிவதே இல்லை.

பல்லாவரம் மேம்பாலத்திலும், பல விளக்குகள் செயலிழந்து உள்ளன. அதேபோல், பல கம்பங்களில் விளக்குகளே இல்லை. இதனால், மேம்பாலத்தில் ஒவ்வொரு நாளும் இரவில் கும்மிருட்டாக உள்ளது. அதனால், சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, பராமரிப்பில் கவனம் செலுத்தாத நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, விளக்குகளை முறையாக ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us