/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விபத்து வாகனம் முடக்கமா? உத்தரவை திரும்ப பெற கடிதம் விபத்து வாகனம் முடக்கமா? உத்தரவை திரும்ப பெற கடிதம்
விபத்து வாகனம் முடக்கமா? உத்தரவை திரும்ப பெற கடிதம்
விபத்து வாகனம் முடக்கமா? உத்தரவை திரும்ப பெற கடிதம்
விபத்து வாகனம் முடக்கமா? உத்தரவை திரும்ப பெற கடிதம்
ADDED : ஜூன் 27, 2025 12:19 AM
சென்னை, விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் திருப்பி ஒப்படைக்க கூடாது என்ற, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவை திரும்ப பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அனைத்து ஆம்னி பஸ்உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், செயலர் திருஞானம் ஆகியோர், முதல்வருக்கு நேற்று அனுப்பிய கடிதம்:
'விபத்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை, 100 நாட்கள் சிறைபிடிக்க வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நிகழ, சாலை விதிகளை கடைப்பிடிக்காத சாலை பயனாளர்கள், கண் மறைவு பிரதேசங்கள், சாலைகள் போன்று பல காரணங்கள் உள்ளன.
விபத்து குறித்து புலனாய்வு செய்து, சாட்சிகளை விசாரித்து அனைத்தையும் சரிபார்த்த பிறகே குற்றவாளி யார் என்பதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், விபத்து நடந்த உடனே கனரக வாகனங்கள்தான் காரணம் என முடிவு செய்வது தவறான முன்னுதாரணம்.
சென்னை போலீஸ் கமிஷனரின் இந்த உத்தரவு, பஸ் உரிமையாளர்களுக்கும் பயணியருக்கும் பாதிப்பை உருவாக்கும்.
ஒரு ஆம்னி பஸ்சை வாங்க, 75 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறோம்.
இருப்பினும், எதிர்பாராத அசம்பாவிதங்களால் விபத்து ஏற்படும்போது வாகனங்களை 100 நாட்கள் சிறை பிடித்தால், வாகனத்திற்கு சாலை வரியாக, அரசுக்கு காலாண்டிற்கு குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய்; மாத தவணை 2 லட்சம் ரூபாய், ஒட்டுநர், பணியாளர்கள் சம்பளம் என முழுமையான நிதிநெருக்கடி ஏற்படும்; பயணியர் சேவையிலும் பாதிப்பும் ஏற்படும்.
எனவே, மேற்கண்ட சட்டத்தை மீறிய உத்தரவை ரத்து செய்தும், சிறைபிடித்த வாகனங்களை விடுவித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.