/உள்ளூர் செய்திகள்/சென்னை/வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பெண்கள் சிறப்பு சிகிச்சை மையம்வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பெண்கள் சிறப்பு சிகிச்சை மையம்
வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பெண்கள் சிறப்பு சிகிச்சை மையம்
வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பெண்கள் சிறப்பு சிகிச்சை மையம்
வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பெண்கள் சிறப்பு சிகிச்சை மையம்
ADDED : ஜன 25, 2024 12:31 AM

சென்னை, சென்னை, வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில், பெண்களுக்கான ஹீமோகுளோபின் மற்றும் நீரழிவு நோய் தடுப்பு சிகிச்சை மையத்தை, குளோபல் என்சிடி அலையன்ஸ் தலைவர் மோனிகா அரோரா நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஈ.வி.கல்யாணி மருத்துவ அறக்கட்டளை இயக்குனர் கீதா அர்ஜுன், டேங்கர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, சவேரா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் நினா ரெட்டி, வி.ஹெச்.எஸ். மருத்துவமனை செயலர் டாக்டர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
வி.ஹெச்.எஸ். மருத்துவமனையின் டி.எ.கோபாலன் நீரிழிவு நோய் ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் உஷா ஸ்ரீராம் கூறியதாவது:
நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய் போன்ற பாதிப்பில் அதிக விளைவுகளை சந்திப்பது பெண்கள் தான்.
பொருளாதாரம், குடும்பச்சூழல் காரணமாக, பெண்கள் தங்கள் உடல் நலனை கவனிக்க தவறி விடுகின்றனர்.
கர்ப்ப காலத்திற்கு முன் நீரிழிவு, ரத்த சோகை பாதிக்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.
உரிய பரிசோதனைகள் செய்வது அவசியம். பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சினை, மனப் பிரச்சனைக்கு இந்த சிகிச்சை மையம் வழியாக சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஆலோசனை, சிகிச்சைக்கு 9500206691 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.