/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : மே 22, 2025 12:33 AM

மேடவாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்குள்ள ஆறாவது வார்டில், 380 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர், வீட்டு மனை பட்டா கோரி நேற்று காலை, கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும், ஆண்டு வருவாய் மூன்று லட்சம் ரூபாய்க்குள் உள்ளவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என, அரசாணை உள்ளது.
ஆனால், அதிகாரிகள் 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்; ஓலை, ஓட்டு வீடாக இருந்தால்தான் பட்டா என்கின்றனர்.
தனியாக வசிக்கும் மகன், மகள் வருவாய் எல்லாம் சேர்த்து கணக்கு காட்டி, நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி பணம் கட்ட சொல்கின்றனர். இதனால், இலவசமாக பட்டா கிடைப்பது தடைபட்டுள்ளது.
எனவே, வி.ஏ.ஓ.,வை சந்திக்க மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றோம். ஆனால், அவர் வரவில்லை, அலுவலகமும் மூடியே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை; அலுவலகமும் திறக்கப்படவில்லை.