/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முடிச்சூர் - மண்ணிவாக்கம் இடையே மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல் முடிச்சூர் - மண்ணிவாக்கம் இடையே மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
முடிச்சூர் - மண்ணிவாக்கம் இடையே மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
முடிச்சூர் - மண்ணிவாக்கம் இடையே மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
முடிச்சூர் - மண்ணிவாக்கம் இடையே மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 26, 2025 12:16 AM
முடிச்சூர், தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், மண்ணிவாக்கம் வழியாக, ஜி.எஸ்.டி., - வாலாஜாபாத் சாலைகளை இணைக்கிறது, தாம்பரம் - முடிச்சூர் சாலை.
ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரான போக்குவரத்து கொண்ட இச்சாலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனகர வாகனங்கள் என, 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது.
வாகன ஓட்டிகள், விபத்து மற்றும் நெரிசலில் சிக்குவதை தடுக்க, மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி எல்லையான, தாம்பரம் மேம்பாலம் முதல் பெருங்களத்துார் வரை மின் விளக்கு பொருத்தப்பட்டு, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பாதுகாப்போடு செல்கின்றனர்.
அதே நேரத்தில், முடிச்சூர் மற்றும் மண்ணிவாக்கம் ஊராட்சிகளின் எல்லையான, பார்வதி நகர் முதல் மண்ணிவாக்கம் வரை, மின் விளக்கு அமைக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதியில் இரவில் ஒருவித பயத்தோடு பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. எந்த இடத்தில் மாடுகள் படுத்திருக்கின்றன என்பது தெரியாமல், அச்சத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது.
அதையும் மீறி, சில நேரங்களில் விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகிறது. முக்கிய சாலையில், பாதி துாரத்திற்கு மின் விளக்கு இருப்பதும், மற்ற பாதி துாரத்திற்கு விளக்கு இல்லாததும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, தாம்பரம் - முடிச்சூர் சாலையில், விடுபட்ட ஊராட்சி பகுதிகளில் மின் விளக்கு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.