/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : மார் 26, 2025 12:16 AM

சென்னை, திருவான்மியூர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 18. மெரினா மணற்பரப்பில் உள்ள மீன்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் மணற்பரப்பில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரை எழுப்பி கத்தியால் தாக்கி, 1,250 ரூபாயை பறித்துச் சென்றார்.
இதில் காயமடைந்த சாமுவேல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மெரினா காவல் நிலையத்தில் அளித்த புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கடலுார் திட்டக்குடியைச் சேர்ந்த மகேந்திரன், 32 என்பவர் கத்தியால் தாக்கி பணம் பறித்துச் சென்றது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து, 700 ரூபாய் மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். மகேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது.
***