/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 504 குடியிருப்புகள் திறந்தார் உதயநிதி 504 குடியிருப்புகள் திறந்தார் உதயநிதி
504 குடியிருப்புகள் திறந்தார் உதயநிதி
504 குடியிருப்புகள் திறந்தார் உதயநிதி
504 குடியிருப்புகள் திறந்தார் உதயநிதி
ADDED : செப் 23, 2025 01:30 AM

மேற்கு மாம்பலம்:மேற்கு மாம்பலத்தில், 77.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 504 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.
மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் தெரு, வாழைத்தோப்பு திட்ட பகுதியில் 1970ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில், 448 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இக்கட்டடங்கள் பழுதடைந்ததால் அதை இடித்து, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 77.76 கோடி ரூபாய் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில், 504 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்த குடியிருப்புகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், ''புதிய வீடு வேண்டும் என்ற உங்கள் கனவை தமிழக அரசு உண்மையாக்கியுள்ளது. நீங்களும் இந்த குடியிருப்பிற்கு பங்களிப்பு தொகை அளித்திருப்பீர்கள்.
''இந்த குடியிருப்புகளை தனியார் குடியிருப்புகள்போல், குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.