/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.1.33 கோடி மதிப்பு 'பாரின் சிகரெட்' பறிமுதல்ரூ.1.33 கோடி மதிப்பு 'பாரின் சிகரெட்' பறிமுதல்
ரூ.1.33 கோடி மதிப்பு 'பாரின் சிகரெட்' பறிமுதல்
ரூ.1.33 கோடி மதிப்பு 'பாரின் சிகரெட்' பறிமுதல்
ரூ.1.33 கோடி மதிப்பு 'பாரின் சிகரெட்' பறிமுதல்
ADDED : செப் 23, 2025 01:30 AM
சென்னை:சென்னை விமான நிலையத்தில் 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னை விமான நிலைய கார்கோ முனையத்திற்கு, நேற்று முன்தினம் சரக்கு விமானம் ஒன்று வந்தது.
அதில் வந்த பார்சல்களில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக, கார்கோ பிரிவு சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விமானத்தில் இருந்த பார்சல்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பார்சல் ஒன்றில் 'வாஷிங் பவுடர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேகமடைந்த அதிகாரிகள், அதை பிரித்து பார்த்ததில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
சோதனையில் 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 4.30 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 1,130 இ - சிகரெட்டுகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.