/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'யு - 13' கால்பந்து போட்டி 12 அணிகள் பலப்பரீட்சை 'யு - 13' கால்பந்து போட்டி 12 அணிகள் பலப்பரீட்சை
'யு - 13' கால்பந்து போட்டி 12 அணிகள் பலப்பரீட்சை
'யு - 13' கால்பந்து போட்டி 12 அணிகள் பலப்பரீட்சை
'யு - 13' கால்பந்து போட்டி 12 அணிகள் பலப்பரீட்சை
ADDED : செப் 01, 2025 01:00 AM

சென்னை:அகாடமி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான யு - 13 கிரிக்கெட் போட்டியில், 12 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை நிகர்நிலை பல்கலை சார்பில், அகாடமி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான, யு - 13 கால்பந்து போட்டி நேற்று துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் போட்டிகள் நடக்கின்றன. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் சூப்பர் லீக் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த 'லீக்' சுற்றில், அசுரா எப்.சி., அணி 8 - 3 என்ற கோல் கணக்கில் ஹாலினி சாக்கரையும், தடம் எம்.சி., அணி, 5 - 0 என்ற கோல் கணக்கில், கடலுார் என்.ஒய்.எஸ்.ஏ., அணியையும் தோற்கடித்தன.
புழல் எப்.சி., அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் அரோ எப்.சி., அணியையும், ஷாலினி எப்.சி., அணி 5 - 0 என்ற கோல் கணக்கில், வேலுார் சர்வதேச பள்ளியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.