/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில அளவிலான வாலிபால் வி.எம்.சி.சி., பல்கலை 'சாம்பியன்' மாநில அளவிலான வாலிபால் வி.எம்.சி.சி., பல்கலை 'சாம்பியன்'
மாநில அளவிலான வாலிபால் வி.எம்.சி.சி., பல்கலை 'சாம்பியன்'
மாநில அளவிலான வாலிபால் வி.எம்.சி.சி., பல்கலை 'சாம்பியன்'
மாநில அளவிலான வாலிபால் வி.எம்.சி.சி., பல்கலை 'சாம்பியன்'
ADDED : செப் 01, 2025 01:01 AM

சென்னை:மாநில அளவிலான வாலிபால் போட்டியில், வி.எம்.சி.சி., பல்கலை மகளிர் அணி, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
சோகா இகடா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, அம்பத்துார், கள்ளிக்குப்பம் - மதனாங்குப்பம் சாலையில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று நிறைவடைந்தது.
ஈஈள், சென்னை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மகளிர் அணிகள் பங்கேற்றன. வி.எம்.சி.சி., எனும் பையனுார் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி பல்கலை அணி, துவக்கம் முதலே ஆதிக் கம் செலுத்தி அசத்தியது.
அந்த வகையில், அரையிறுதியில் வி.எம்.சி.சி., அணி, 25 - 12, 25 - 20 என்ற செட் கணக்கில் ராணிமேரி கல்லுாரியை தோற்கடித்தது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், வி.எம்.சி.சி., மற்றும் அன்னை வேளாங்கண்ணி அணிகள் மோதின. அதில், 25 - 10, 25 - 16 என்ற செட் கணக்கில், வி.எம்.சி.சி., அணி வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.