/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
ADDED : மே 30, 2025 12:22 AM
நொளம்பூர் :மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன்குமார், 22. நொளம்பூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் பணி முடிந்து, அவர் தங்கிருக்கும் பகுதிக்கு, கடந்த 27ம் தேதி நள்ளிரவு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக, 'யமஹா' பைக்கில் வந்த இருவர், பவன்குமாரிடமிருந்து பொபைல் போனை பறித்து தப்பினர்.
இது குறித்து, நொளம்பூர் குற்றப்பிரிவில் அவர் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அங்குள்ள 'சிசிடிவி' காட்சிகளின்படி, பவன்குமாரிடம் மொபைல் பறிப்பில் ஈடுபட்டது, நொளம்பூர் யூனியன் சாலையைச் சேர்ந்த சுனில், 22, சின்ன நொளம்பூரைச் சேர்ந்த ஹானஸ்ட்ராஜ், 19, என தெரிந்தது.
இருவரையும், போலீசார் நேற்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர். அதில், இவர்கள் தொடர்ந்து மொபைல் போன் திருட்டில் ஈடுபடுவது தெரிந்தது.ையில் உள்ளது குறிப்பிடதக்கது.