/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுபாட்டில் பதுக்கி விற்ற இரண்டு பெண்கள் கைது மதுபாட்டில் பதுக்கி விற்ற இரண்டு பெண்கள் கைது
மதுபாட்டில் பதுக்கி விற்ற இரண்டு பெண்கள் கைது
மதுபாட்டில் பதுக்கி விற்ற இரண்டு பெண்கள் கைது
மதுபாட்டில் பதுக்கி விற்ற இரண்டு பெண்கள் கைது
ADDED : மே 17, 2025 09:56 PM
சென்னை:பெரியமேடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், நேற்று காலை, என்.எச்., சாலை, நான்காவது தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இருவரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த பரஞ்ஜோதி, 65, சசிகலா, 39, என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், 27 குவாட்டர் பாட்டில்கள், 600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பரஞ்ஜோதி மீது, சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக, ஒன்பது வழக்குகளும், சசிகலா மீது, ஒரு வழக்கும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.