Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக் - மணல் லாரி மோதல் விபத்தில் தாய், மகள் பலி

பைக் - மணல் லாரி மோதல் விபத்தில் தாய், மகள் பலி

பைக் - மணல் லாரி மோதல் விபத்தில் தாய், மகள் பலி

பைக் - மணல் லாரி மோதல் விபத்தில் தாய், மகள் பலி

ADDED : மே 17, 2025 09:57 PM


Google News
வில்லிவாக்கம்:கேரளா மாநிலம், இடுக்கி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா, 37. இவருக்கு திருமணமாகி, கரோலி டேயா, 3, என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவரை பிரிந்து வாழும் பிரியங்கா, சென்னை தி.நகரில் தங்கி, வீடுகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர், படப்பையை சேர்ந்த ஐ.டி., ஊழியரான சரவணன், 27, என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும், திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சரணவன், பிரியங்கா மற்றும் கரோலின் டேயா ஆகிய மூவரும், 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்றனர்.

பின், சுவாமி கும்பிட்டு விட்டு, நேற்று மதியம் 11:45 மணிக்கு, வில்லிவாக்கம், 100 அடி சாலை வழியாக, படப்பை நோக்கி வீடு திரும்பினர்.

அப்போது, பாடி மேம்பாலத்தில் ஏறியபோது, அதே வழியாக வந்த டிப்பர் லாரி, சரவணனின் பைக்கில் மோதியது.

இதனால் நிலைத்தடுமாறி, பிரியங்கா வலது பக்கமும், சரவணன் மற்றும் கரோலின் இடது பக்கமும் கீழே விழுந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், பிரியங்கா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கரோலின் டேயா, தலையில் காயமடைந்து சுயநினைவின்றி கிடந்தார். சரவணன், தோள்பட்டையில் லேசான காயங்களுடன் தப்பினார்.

சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்த இருவரையும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, கரோலின் டேயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெயகுமார், 34, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us