Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வெவ்வேறு விபத்து இருவர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்து இருவர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்து இருவர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்து இருவர் உயிரிழப்பு

ADDED : பிப் 12, 2024 01:54 AM


Google News
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 80. இவர் நேற்று முன்தினம் காலை, பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மகன் ஜெய்சங்கருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி அருகே வரும்போது, வேகத்தடை ஒன்றில் பைக் ஏறி இறங்கும்போது, கஸ்துாரி நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

 சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பக்தவச்சலம், 51. இவர், நேற்று மதியம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றுவிட்டு, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சோழவரம் அடுத்த அத்திப்பேடு அருகே செல்லும்போது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை கடப்பதற்காக வலதுபுறம் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்தார்.

அதே சமயம், பின்னால் வந்த லாரி ஒன்று, பக்தவச்சலம் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us