Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மரம் வெட்டியபோது முறிந்து விழுந்து விபரீதம் சுற்றுச்சுவர் இடிந்து இருவர் பலி; ஒருவர் சீரியஸ்

மரம் வெட்டியபோது முறிந்து விழுந்து விபரீதம் சுற்றுச்சுவர் இடிந்து இருவர் பலி; ஒருவர் சீரியஸ்

மரம் வெட்டியபோது முறிந்து விழுந்து விபரீதம் சுற்றுச்சுவர் இடிந்து இருவர் பலி; ஒருவர் சீரியஸ்

மரம் வெட்டியபோது முறிந்து விழுந்து விபரீதம் சுற்றுச்சுவர் இடிந்து இருவர் பலி; ஒருவர் சீரியஸ்

ADDED : மார் 17, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
அம்பத்துார்:அம்பத்துார் தொழிற்பேட்டை முதலாவது தெருவில், 'கெமின் இண்டஸ்ட்ரீஸ் சவுத் ஏசியா' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அங்கு, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த தண்டபாணி, 41, மேலாளராகவும்; செவ்வாப் பேட்டையைச் சேர்ந்த மாதவன், 54, மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

அந்நிறுவனத்தில் சுற்று சுவரை ஒட்டியுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும்படி, தண்டபாணி அறிவுறுத்தினார். இதன்படி, கார்பெண்டர் வந்த விஜயகுமாரிடம், 41, மாதவன் கூறியுள்ளார்.

மரம் வெட்டும் தொழிலில் அனுபவம் உள்ள வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தங்கராஜ், 42, செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த அன்பழகன், 49, அவரது மருமகன் அருள், 29, ஆகியோரையும் உதவிக்காக, விஜயகுமார் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, இரண்டு மரங்களின் கிளைகளை வெட்டிய பின், அருகில் இருந்த மா மரத்தை வெட்டியுள்ளனர். வெட்டியபின், மரத்தை கயிறு கட்டி இழுத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மரம் முறிந்து, சுற்றுசுவரின் மீது விழுந்தது. இதனால் சுவர் உடைந்து, அங்கிருந்த தங்கராஜ், விஜயகுமார், அன்பழகன் ஆகியோர் மீது விழுந்தது.

இதில், பலத்த காயமடைந்த தங்கராஜ் அங்கேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் விஜயகுமார், அன்பழகன் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார். அன்பழகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முறையான பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்காமல், வேலை வாங்கியதாக கூறி, இறந்தவர்களின் குடும்பத்தினர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின், சம்பவ இடத்துக்கு சென்று, நிறுவனத்தின் காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஜன்னல், மின்விளக்கு உள்ளிட்டவற்றையும் சூறையாடினர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தனியார் நிறுவன மேலாளர் தண்டபாணி, மேற்பார்வையாளர் மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us