Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இரண்டு இன்ஜின் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

இரண்டு இன்ஜின் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

இரண்டு இன்ஜின் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

இரண்டு இன்ஜின் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

ADDED : பிப் 06, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
காசிமேடு'மீனவர்கள் ஆழ்கடலில் பாதிக்கப்படும் போது, உயிர் காக்கும் விசைப்படகுகள் வசதி வேண்டும்' என, இரண்டு இன்ஜின் பைபர் படகு மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து, காசிமேடு இரண்டு இன்ஜின் பைபர் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலசங்கத்தினர் கூறியதாவது :

பிப்., 1ம் தேதி, பழவேற்காடு அருகே இரண்டு இன்ஜின் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையின் வேகத்தால், கடல் நீர் படகில் ஏறி, மூழ்க துவங்கியது. படகில் இருந்தவர்கள், உதவி கேட்டு ஒயர்லெஸ் வாயிலாக மீன்வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை.

அருகில் இருந்த மற்ற மீனவர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு கரை சேர்த்தனர். ஆனால், பைபர் படகு கடலில் மூழ்கியது. படகு, வலைகளின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய்.

முன்னர் சென்னை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்கரைகளில் உயிர் காக்கும் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற பிரச்னை ஏற்படும் போது, உயிர்காக்கும் படகுகள் மூலம் எளிதில் காப்பற்ற முடியும். சுனாமிக்கு பின், அப்படிப்பட்ட படகுகள் இல்லாததால், மீனவர்கள் மற்றும் அவர்களது உடைமைகளை பாதுகாக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே, உயிர் காக்கும் விசைப்படகுகள் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இரண்டு இன்ஜின் பொருத்திய படகை நாட்டுப் படகாக கருதி, 75,000 ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசாணையை மாற்றி, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதே போல், பெரிய விசைப்படகுகளுக்கு 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

படகுகள் கடலில் மூழ்காமல் இருக்க, நாட்டுப் படகுகளின் நீளம், 15 மீட்டரில் இருந்து 18 - 20 மீட்டர் நீளமாக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக, கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட ஆணைய விதி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு இன்ஜின் பொருத்திய 150 பைபர் படகுகள், 1,000த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us