/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்கூட்டர் திருடி 'ரேஸ்' சிறுவர்கள் இருவர் கைதுஸ்கூட்டர் திருடி 'ரேஸ்' சிறுவர்கள் இருவர் கைது
ஸ்கூட்டர் திருடி 'ரேஸ்' சிறுவர்கள் இருவர் கைது
ஸ்கூட்டர் திருடி 'ரேஸ்' சிறுவர்கள் இருவர் கைது
ஸ்கூட்டர் திருடி 'ரேஸ்' சிறுவர்கள் இருவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 09:47 PM
எண்ணுார்:எண்ணுார், சுனாமி குடியிருப்பு, ஒத்தவாடை பகுதியில், எண்ணுார் போலீசார் மோகன், ஏழுமலை ஆகியோர், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், இரண்டு ஸ்கூட்டர்களில் ஐந்து பேர் வந்தனர்.
அவர்களை, போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், ஸ்கூட்டரில் வந்தவர்கள் நிற்காமல் போக்கு காட்டி சென்றுள்ளனர். சுதாரித்த போலீசார் அவர்களை துரத்தி சென்றுள்ளனர். அதில், மூன்று பேர் பயணித்த 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர், பாரதியார் நகர் வழியாக அன்னை சிவகாமி நகர் மேம்பாலம் சென்றது.
போலீசார் பின் தொடர்ந்து சென்று, மேம்பாலத்தில் வைத்து ஸ்கூட்டரை மடக்கி பிடித்தனர். இதில், இருவர் தப்பி விட, 13 வயது சிறுவன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பதும், வீட்டருகே நிறுத்தியிருந்த, ஸ்கூட்டரை நண்பர்களுடன் திருடி வந்து, அதிகாலை பைக் ரேஸ் ஓட்டியதும் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவனையும், போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், எண்ணுார், சுனாமி குடியிருப்பு, 106வது பிளாக்கைச் சேர்ந்த, விஜயகாந்த், 43, என்பவர் தன், 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது குறித்து, நேற்று காலை புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவர்களிடம் விசாரிக்கின்றனர்.