/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரும்பு ராடு, பைப் விற்று தருவதாக ரூ.2.32 கோடி மோசடி: இருவர் கைது இரும்பு ராடு, பைப் விற்று தருவதாக ரூ.2.32 கோடி மோசடி: இருவர் கைது
இரும்பு ராடு, பைப் விற்று தருவதாக ரூ.2.32 கோடி மோசடி: இருவர் கைது
இரும்பு ராடு, பைப் விற்று தருவதாக ரூ.2.32 கோடி மோசடி: இருவர் கைது
இரும்பு ராடு, பைப் விற்று தருவதாக ரூ.2.32 கோடி மோசடி: இருவர் கைது
ADDED : ஜூலை 05, 2025 12:15 AM

ஆவடி, தனியார் நிறுவனத்திடம் இரும்பு ராடு, எம்.எஸ்., பைப் உள்ளிட்டவற்றை விற்று தருவதாக கூறி, 2.32 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம், எம்.ஜி.ஆர்., சாலையை சேர்ந்தவர் வடிவேல். இவர், மணலி சாத்தாங்காட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை, கீழ்கட்டளையை சேர்ந்த சதீஷ், 48; காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஜெகன், 48, நரசிம்மன், 51, ஆகியோர் தொடர்பு கொண்டனர்.
அவரது நிறுவனத்தில் தயாரிக்கப்படும், இரும்பு ராடு எம்.எஸ்., பைப் உள்ளிட்டவற்றை விற்று தருவதாக கூறியுள்ளனர்.
மேலும், ஆறு தனியார் நிறுவனங்களிடம், பொருட்கள் சப்ளை செய்வதாக கூறி, பணத்தை வாங்கியுள்ளனர். அந்த பணத்தை வடிவேல் பணிபுரியும் நிறுவனத்தில் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து, மூன்று பேர் மீதும், 2.32 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் வடிவேல் புகார் அளித்தார்.
போலீசார், பிப்ரவரி மாதம், நரசிம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த சதீஷ், ஜெகன் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.