ADDED : ஜூன் 01, 2025 10:01 PM
ஓட்டேரி,:ஓட்டேரி தாசமக்கான், சுபேதார் தெருவைச் சேர்ந்த இப்ராஹிம், 24 என்பவரது வீட்டில், போலீசார் சோதனை செய்தனர். அங்கு, கஞ்சா மற்றும் கத்தி இருந்தது.
அவரையும், அவரது வீட்டில் இருந்த, அம்பத்துார் சூரப்பட்டை சேர்ந்த முகமது குல்பான், 27, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 235 கிராம் கஞ்சா, ஹோண்டா ஆக்டிவா, கத்தி, இரண்டு மொபைல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்டனர்.