/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காதலனை சந்திக்க வந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி? காதலனை சந்திக்க வந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி?
காதலனை சந்திக்க வந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி?
காதலனை சந்திக்க வந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி?
காதலனை சந்திக்க வந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி?
ADDED : ஜூன் 01, 2025 10:01 PM
சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, கோவையில் வேலை பார்த்து வருகிறார். அவரது தாய், சென்னை பூந்தமல்லியில் வசிக்கிறார்.
தாயை பார்க்க, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த சிறுமி, இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய, வடசென்னையைச் சேர்ந்த காதலன் சாய் என்பவரை சந்திக்க சென்றுள்ளார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, 1:30 மணியளவில், கொத்தவால்சாவடி காவல் நிலைய பகுதியில், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடம் அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அங்கு, இரு சக்கர வாகனத்தில் மேலும் இருவர் வந்தனர்.
மூவரும், சிறுமியை கட்டடத்தின் உள்ளே அழைத்துச் செல்ல முயன்றனர். அப்பகுதியைச் சேர்ந்தோர், அவசர போலீஸ் உதவி எண்:100க்கு தகவல் தெரிவித்தனர்.
கொத்தவால்சாவடி போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர்கள் மூவரும், இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பினர்.
போலீசார் சிறுமியை மீட்டு, துறைமுகம் மகளிர் போலீசார் வாயிலாக, காப்பத்தில் தங்க வைத்தனர்.
காதலனை சந்திக்க சிறுமியை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, 22 - 26 வயதான, வடசென்னையைச் சேர்ந்த சாய், ராகுல் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.