/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குதிரை தொழுவமாக மாறிய பூங்கா திருவேற்காடில் அவலம் குதிரை தொழுவமாக மாறிய பூங்கா திருவேற்காடில் அவலம்
குதிரை தொழுவமாக மாறிய பூங்கா திருவேற்காடில் அவலம்
குதிரை தொழுவமாக மாறிய பூங்கா திருவேற்காடில் அவலம்
குதிரை தொழுவமாக மாறிய பூங்கா திருவேற்காடில் அவலம்
ADDED : ஜூன் 18, 2025 12:25 AM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சி, 13வது வார்டு காயத்ரி நகரில், கடந்த 2019ல், சி.எம்.டி.ஏ., நிதியின் கீழ் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், சிறுவர் விளையாட்டு திடல், நடைபயிற்சி மேற்கொள்ள தனிப்பாதை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளாக, பூங்கா போதிய பராமரிப்பின்றி செடி, கொடியுடன் புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும், விளையாட்டு உபகரணங்களும் மழையில் துருப்பிடித்து உடைந்து, காயலான் கடை பொருட்கள் போல் மாறியுள்ளது.
இரவு வேளைகளில் 'குடி'மகன்களின் கூடாரமாக வருகிறது. இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, பூங்காவை பயன்படுத்த தயங்குகின்றனர்.
தற்போது, பூங்காவை குதிரை கட்டி மேய்க்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.