/உள்ளூர் செய்திகள்/சென்னை/எழும்பூரில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துஎழும்பூரில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
எழும்பூரில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
எழும்பூரில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
எழும்பூரில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
ADDED : ஜன 11, 2024 01:56 AM

சென்னை:எழும்பூர் அருகே உள்ள பணிமனையில் இருந்து ரயில்களை, ரயில் நிலையத்துக்கு கொண்டுவரவும், நிலையத்தில் இருந்து பணிமனைக்கு கொண்டு செல்லவும், இழுவை ரயில் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரயில் இன்ஜின், நேற்று எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை நோக்கி வந்த போது, நண்பகல் 12:30 மணி அளவில் திடீரென தடம்புரண்டது. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் இன்ஜினில் இருந்து இரண்டு சக்கரங்கள் ரயில் பாதையை விட்டு கீழே இறங்கியது.
இதையடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப அலுவலர்கள் ரயில் இன்ஜினை நீக்கி, சேதமடைந்த ரயில் பாதையை சீரமைத்தனர். மாலை 3:45 மணிக்கு பின், இந்த ரயில் பாதையில் வழக்கமான சேவை துவக்கப்பட்டது.
ரயில் பாதையில் ஏற்கனவே இருந்த விரிசல் தான், ரயில் இன்ஜின் தடம்புரண்டதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் இன்ஜின் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன. சென்னை - திருச்செந்துார் விரைவு ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதுபோல், வந்தே பாரத் ரயில் நடைமேடை 7ல் இருந்தும் இயக்கப்பட்டது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.