/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் வடிகால்வாய் பணியால் போக்குவரத்து பாதிப்பு மழைநீர் வடிகால்வாய் பணியால் போக்குவரத்து பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் பணியால் போக்குவரத்து பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் பணியால் போக்குவரத்து பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் பணியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:08 AM

ஆலந்துார்,:ஆலந்துார், மெட்ரோ ரயில் நிலையம் அருகே எம்.கே.என்., சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தோர், ஜி.எஸ்.டி., சாலையை அடைய, இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துவர்.
இச்சாலையில், காய்கறி சந்தை, அரிசி மண்டி, பல சரக்கு மொத்த விற்பனையகங்கள் உள்ளதால் ஏராளமான கனரக வாகன போக்குவரத்து இருக்கும்.
இந்நிலையில், நடந்து வரும் வடிகால்வாய் திட்டப் பணியால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் இப்பணியை விரைந்து முடித்து, போக்கு வரத்திற்கு வழிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.
அதேநேரம், ஆலந்துாரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் விடப்படுவது குறித்தும் மண்டல அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.