ADDED : ஜூன் 13, 2025 12:34 AM
வளசரவாக்கம், சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
வளசரவாக்கம், போரூர், விருகம்பாக்கம், வடபழனி, கே.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளில், பெய்த மழையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் போரூர் சந்திப்பில் சாலையில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், வடபழனி, விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெரிசல் ஏற்பட்டது.