/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புகை பிடித்ததை கண்டித்ததற்காக குண்டு வீசிய 3 சிறார்கள் கைது புகை பிடித்ததை கண்டித்ததற்காக குண்டு வீசிய 3 சிறார்கள் கைது
புகை பிடித்ததை கண்டித்ததற்காக குண்டு வீசிய 3 சிறார்கள் கைது
புகை பிடித்ததை கண்டித்ததற்காக குண்டு வீசிய 3 சிறார்கள் கைது
புகை பிடித்ததை கண்டித்ததற்காக குண்டு வீசிய 3 சிறார்கள் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:34 AM
கோவிலம்பாக்கம்,கோவிலம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் வினோத், 32; ஓட்டுநர். கடந்த 8ம் தேதி நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றனர். இதில், அவரது, 11 வயது மகனின் கையில் தீ காயம் ஏற்பட்டது.
அதேபோல், ஏழாவது தெருவைச் சேர்ந்த நித்தியானந்தன், 40, தந்தை பெரியார்நகர், 2வது தெருவைச் சேர்ந்த திலகவதி, 55, ஆகியோரது வீடுகளிலும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த, 17வயது சிறுவனை பிடித்தனர். அவன் தந்த தகவலின்பேரில் கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், காந்திநகரை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்தபோது, வீட்டு அருகில் சிகரெட் பிடித்தபோது, வினோத் உள்ளிட்ட சிலர் கண்டித்து அவர்களை விரட்டி அடித்தது தெரிந்தது. இதில் ஏற்பட்ட சிறு மனக்கசப்பால், பழிவாங்கும் நோக்கில் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக, சிறுவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.