Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (21.09.2025)

இன்று இனிதாக (21.09.2025)

இன்று இனிதாக (21.09.2025)

இன்று இனிதாக (21.09.2025)

ADDED : செப் 21, 2025 12:18 AM


Google News
ஆன்மிகம் அகோபில மடம் தேசிகன், ஆதிவண் சடகோப சுவாமிகளின் திருநட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு பல்லக்கு புறப்பாடு- - காலை 8:00 மணி. சூரிய பிரபை புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கண்ணப்ப சுவாமிகள் ஆசிரமம் 64ம் ஆண்டு குருபூஜை விழாவில் கருவறையில் விபூதி நிரப்பும் நிகழ்ச்சி - காலை 10:00 மணி, தீபாராதனை, அன்னதானம் - 12:00 மணி, ஹரிநாம சங்கீர்த்தனம், ஷரி பந்த நிகழ்ச்சி - மாலை 5:00 மணி. இடம்: காவாங்கரை, புழல்.

குமரன்குன்றம் உபன்யாசம். மகான்களின் சங்கமம்- ஆனந்த் தயாநிதி பாகவதர்- - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது முருகன் பாடல் வெளியீடு தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் டாக்டர் சுவாமி பத்மேந்திரா இயற்றிய 'முருகா! முருகா! நின்னடி!' ஞானத் திருப்பாடல், அமைச்சர் சேகர்பாபு வெளியீடு, காலை 10:00 மணி. இடம்: பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகளின் திருக்கோவில் மண்டபம், திருவான்மியூர்.

விருது வழங்கும் விழா தெய்வத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆசிரிய மாமணி விருது வழங்கும் விழா - மாலை 5:00 - 8:00. இடம்: அட்சயம் ஹோட்டல் முதல் மாடி, சாந்தி காலனி, அண்ணா நகர் மேற்கு.

முப்பெரும் விழா பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு சார்பில் கவியரசர் கண்ணதாசன் விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா - காலை 9:30 மணி முதல். இடம்: வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம்.

'கொலு' பொம்மை கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

கடற்கரையில் வாசிப்பு கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட்நகர்.

இலக்கிய மன்ற மாத நிகழ்ச்சி அருந்தமிழ்க் கலை இலக்கிய மன்றம் மற்றும் திருவள்ளூர் முப்பால் மாணவர் மன்றத்தில் 85வது மாத விழா - மாலை 4:00 மணி. இடம்: அய்யப்பா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, துளசிங்கம் தெரு, பெரம்பூர்.

கனவு இல்லம் கண்காட்சி எஸ்.பி.ஐ., கிரெடாய் இணைந்து நடத்தும் 'நம்ம கனவு இல்ல' கண்காட்சி- - காலை 10:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us