/உள்ளூர் செய்திகள்/சென்னை/பழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு செய்யபழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு செய்ய
பழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு செய்ய
பழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு செய்ய
பழைய குடியிருப்புகள் மறுமேம்பாடு செய்ய
ADDED : ஜூன் 01, 2024 12:17 AM
சென்னை,
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வீட்டுவசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களுக்கு முறையாக வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டாலும், சில இடங்களில் ஒதுக்கீட்டாளர்களுடன் தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து, மறு மேம்பாட்டு பணிகளை துவக்கி உள்ளன.
இருப்பினும், சில இடங்களில் தனியாருடன் நேரடியாக கைகோர்க்க, வீட்டு உரிமையாளர்கள் தயங்குகின்றனர். இதனால், இந்த விஷயத்தில் வீட்டுவசதி வாரியம் பங்கேற்க முடிவு செய்தது. பழைய குடியிருப்புகள் தனியார் வாயிலாக மறுமேம்பாடு செய்யும் போது, அதில் தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வீட்டுவசதி வாரியம் பங்கேற்கிறது.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் முகப்பேர், அண்ணா நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், லோட்டஸ் காலனி, பாரதிதாசன் காலனி, கோல்டன் ஜூப்ளி காலனி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தென்றல் ஆகிய வாரிய குடியிருப்புகள், மறுமேம்பாடு செய்யப்பட உள்ளன.
இங்கு, வீடு வாங்கியுள்ள உரிமையாளர்கள், தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, மறுமேம்பாடு செய்வதில் வாரியம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளது.
இதற்கான தனியார் கட்டுமான நிறுவனங்களை தேடும் பணிகள் துவங்கியுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் சங்க நிர்வாகங்கள் வாயிலாக, இப்பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு மட்டுமல்லாது, வேறு சில அடுக்குமாடி குடியிருப்புகள் மறுமேம்பாட்டு பணிகளிலும் பங்கேற்க வாரியம்திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.