/உள்ளூர் செய்திகள்/சென்னை/டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் எழும்பூர் ஆர்.சி., அணி வெற்றிடி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் எழும்பூர் ஆர்.சி., அணி வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் எழும்பூர் ஆர்.சி., அணி வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் எழும்பூர் ஆர்.சி., அணி வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் எழும்பூர் ஆர்.சி., அணி வெற்றி
ADDED : மார் 13, 2025 12:39 AM

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், நகரில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
இரண்டாவது டிவிசன்: எம்.ஆர்.சி., 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு, 248 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த எழும்பூர் ஆர்.சி., அணி, 47.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து, 249 ரன்களை அடித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் வீரர் கிரண் கார்த்திகேயன், 139 பந்துகளில் இரண்டு சிக்சர், எட்டு பவுண்டரிகளுடன், 113 ரன்களை அடித்தார்.
மற்றொரு போட்டியில், ஸ்வராஜ் சி.சி., அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 216 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய எம்.சி.சி., அணி, 38.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 217 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
அந்த அணியின் வீரர் பாரத், 111 பந்துகளில் ஐந்து சிக்சர், பத்து பவுண்டரிகளுடன், 105 ரன்களை அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
மூன்றாவது டிவிசன் 'ஏ' பிரிவு: பிரேமா சி.சி., 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 282 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த மாம்பலம் மஸ்கிடோஸ் அணி, 46.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரேமா சி.சி., வீரர் அபு சஜித், 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.