Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (13.03.2025)

இன்று இனிதாக (13.03.2025)

இன்று இனிதாக (13.03.2025)

இன்று இனிதாக (13.03.2025)

ADDED : மார் 13, 2025 12:40 AM


Google News
ஆன்மிகம்
பிரம்மோத்சவ விழா

கடலாடு தீர்த்தவாரி உற்சவம், காலை 8:00 மணி; பிட்சாடனர் மற்றும் தண்டபாணி உற்சவம், மாலை 4:00மணி; தியாகராஜ சுவாமி உற்சவம், கொடியிறக்கம், இரவு 8:00 மணி. இடம்: தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர்.

உபன்யாசம்

ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், நிகழ்த்துபவர் ஸ்ரீ நாம்தேவ் பாகவதர், காலை 7:00 மணி முதல் மதியம் 12:00; மாலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், ராம் நகர், நங்கநல்லுார்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பவுர்ணமி கிரிவலம், மாலை 5:00 மணி, இடம்: அரசன்கழனி, ஒட்டியும்பாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம்

பவுர்ணமி பூஜை, மாலை 5:30 மணி, இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

வழிபாடு, பாலாபிஷேகம், காலை 8.00 மணி; சாவடி ஊர்வலம், மாலை 6.30 மணி, இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

ராகவேந்திராலயம்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை

பொது
நுால் வெளியீடு

எழுத்தாளர் வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லுாரி, சேப்பாக்கம்.

இலவச பிராண சிகிச்சை முகாம்

உடல், மனம் சார்ந்த நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக்2, எண்.2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us