/உள்ளூர் செய்திகள்/சென்னை/பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களில் முடியும்: அமைச்சர் அன்பரசன்பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களில் முடியும்: அமைச்சர் அன்பரசன்
பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களில் முடியும்: அமைச்சர் அன்பரசன்
பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களில் முடியும்: அமைச்சர் அன்பரசன்
பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களில் முடியும்: அமைச்சர் அன்பரசன்
ADDED : ஜூன் 24, 2025 12:11 AM
ஆலந்துார்,ஆலந்துார், தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் ஓட்டு சேகரிக்க சென்றபோது, ஆலந்துார் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளில், ஒன்றை தவிர அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம்.
நிறைவேற்றாத ஒன்று, ராணுவ இடத்தில் சுடுகாடு பிரச்னை. அதற்கு மனு அளித்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மத்தியில், தி.மு.க., கூட்டணி ஆட்சி வந்த பின், அந்த கோரிக்கை தீர்க்கப்படும்.
இங்கு, 1996ல் கொண்டுவந்த பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால், 123.63 கோடி ரூபாயில், 18 கி.மீ., நீளத்திற்கு புதிய ராட்சத குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரு மாதங்களில் இத்திட்டம் முடியும்.
ஆலந்துார் புதுதெருவில், 18 கோடி ரூபாயில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. பாலகிருஷ்ணாபுரத்தில், 11 கோடி ரூபாயில் நவீன திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மண்டலத்தில், 1000 கோடி ரூபாய் சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அடுத்த 20 நாட்களில், 48 கோடி ரூபாயில் மண்டல அலுவலக கட்டுமானம் துவக்கப்பட உள்ளது. அறிவித்தபடி, ஆலந்துாரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வகுப்புகள், இந்த மாத இறுதியில் துவக்கப்படுகின்றன.
வெளியூர் பெண்கள் தங்கி பணியாற்ற தோழி விடுதி, துணை மின்நிலையம், மினி ஸ்டேடியம், 65 கோடி ரூபாயில் ஹஜ் இல்லம் வரவுள்ளன. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் அடக்கஸ்தலம் வழங்கி விட்டோம். நிதி பள்ளி அருகே, 2.5 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.