/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீட்டு வளாகத்தில் புகுந்து சிறுவனை குதறிய தெருநாய்வீட்டு வளாகத்தில் புகுந்து சிறுவனை குதறிய தெருநாய்
வீட்டு வளாகத்தில் புகுந்து சிறுவனை குதறிய தெருநாய்
வீட்டு வளாகத்தில் புகுந்து சிறுவனை குதறிய தெருநாய்
வீட்டு வளாகத்தில் புகுந்து சிறுவனை குதறிய தெருநாய்
ADDED : ஜூன் 24, 2025 12:11 AM
ராமாபுரம், ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அஸ்வின் - பிரீத்தி தம்பதி. இவர்களது மகன் ரித்விக், 9, ெஷனாய் நகரில் உள்ள சிறப்பு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ரித்விக் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த தெருநாய், திடீரென சிறுவனின் வலது கணுக்காலில் கடித்தது.
இதில் காயமடைந்த சிறுவனை, பெற்றோர், ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து சிறுவனின் தாய் பிரீத்தி கூறுகையில், ''எங்கள் பகுதியில், அதிகளவில் தெரு நாய்கள் உள்ளன. என் மகனை போல் மற்ற சிறுவர்களுக்கு நடக்காமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.