/உள்ளூர் செய்திகள்/சென்னை/கண்ணை கட்டியபடி சிலம்பம் 'கீபோர்டு' வாசித்்து சிறுமி அசத்தல்கண்ணை கட்டியபடி சிலம்பம் 'கீபோர்டு' வாசித்்து சிறுமி அசத்தல்
கண்ணை கட்டியபடி சிலம்பம் 'கீபோர்டு' வாசித்்து சிறுமி அசத்தல்
கண்ணை கட்டியபடி சிலம்பம் 'கீபோர்டு' வாசித்்து சிறுமி அசத்தல்
கண்ணை கட்டியபடி சிலம்பம் 'கீபோர்டு' வாசித்்து சிறுமி அசத்தல்
ADDED : ஜன 31, 2024 12:32 AM

சென்னை,அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபிநயா சுரேஷ், 11. முகப்பேர் வேல்ஸ் குளோபல் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி. அகத்தியா சென்னை சிலம்பம் கூடத்தில், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்த 2022ல், மாநில அளவில், தஞ்சாவூரில் நடந்த சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடமும், கடந்தாண்டு, சென்னையில் நடந்த போட்டியில் முதலிடமும் பெற்றார்.
இந்த நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்னையில், 'துரோனா மூன்றாம் கண் யோகா' அடிப்படையில், கண்ணை கட்டி வலது கையில் கீபோர்டில் இசை அமைத்தும், இடது கையில் சிலம்பமும் சுற்ற துவங்கினார்.
வெளியில் இருந்து பார்வையாளர்கள் கூறியபடி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கீபோர்டிலும் வண்ணத்திற்கு ஏற்ப மாறி மாறி இசையமைத்து அசத்தினார்.
இந்த நிகழ்வு, தொடர்ந்து 41 நிமிடம் நடந்தது. சிலம்பத்திலும் சீறிய அபிநயா சுரேஷின் சாதனை, 'வின்னர் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு' எனும் புத்தகத்தில் இடம் பிடித்தது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் சிறுமிக்கு வழங்கப்பட்டன.
அபிநயாவிற்கு 'துரோனா முன்றாம் கண்' பயிற்சி தீபா; சிலம்பம் பயிற்சி முத்துக்குமார்; கீபோர்டு பயிற்சியை விஜய் பிரியன் வழங்கியுள்ளனர்.