பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்: அகிலேஷ் திட்டவட்டம்
பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்: அகிலேஷ் திட்டவட்டம்
பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்: அகிலேஷ் திட்டவட்டம்
ADDED : ஜூன் 11, 2024 04:22 PM

லக்னோ: பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., ஆளும் உ.பி.,யின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆக அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார். உ.பி.யின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் அகிலேஷ் இருந்தார். திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று, அகிலேஷ் எம்.பி ஆனார். இதனால் அவர் எம்.எல்.ஏ., பதவியை இன்று(ஜூன் 11) ராஜினாமா செய்தார்.
பிரச்னைகள்
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். உ.பியில் 2027ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே அடுத்த இலக்கு. இப்போது இருந்து அதற்கான பணிகளை கட்சியினர் துவங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற, சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி.
3வது இடம்
தற்போது நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது. எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. இம்முறை கடும் வெயிலிலும் பணியாற்றிய கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். பா.ஜ., அரசை வீழ்த்துவதற்காக எம்.பி பதவியை அகிலேஷ் யாதவ் தக்க வைத்து கொண்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.