/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹோட்டல் ஷட்டர் விழுந்து வாலிபர் பலி? ஹோட்டல் ஷட்டர் விழுந்து வாலிபர் பலி?
ஹோட்டல் ஷட்டர் விழுந்து வாலிபர் பலி?
ஹோட்டல் ஷட்டர் விழுந்து வாலிபர் பலி?
ஹோட்டல் ஷட்டர் விழுந்து வாலிபர் பலி?
ADDED : ஜூன் 09, 2025 02:26 AM
செம்பியம்:ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் புவலா பாஸ்கர், 34. இவர், பெரம்பூரில் தங்கி, சங்கீதா உணவகத்தில் பணியாற்றி வந்தார். மதுபோதைக்கு அடிமையான புவலா பாஸ்கரை, நேற்று முன்தினம் பணியில் இருந்து நிர்வாகம் நிறுத்தி உள்ளது.
இந்நிலையில், புவலா பாஸ்கர் மதுபோதையில் நேற்று முன்தினம் இரவு, சங்கீதா உணவகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்குள் செல்ல, அங்கிருந்த ஷட்டரை துாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, பாரம் தாங்காமல் ஷட்டர் அவர் கழுத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை அங்கு சென்ற காவலாளி, செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார், புவலா பாஸ்கரின் உடலை கைப்பற்றி, மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.