ADDED : ஜூன் 09, 2025 02:25 AM
ஆதம்பாக்கம், :வேளச்சேரியைச் சேர்ந்தவர் கலில் ரகுமான், 35. இவர், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
பக்ரீத் பண்டிகைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில், நேற்று இரவு 7:00 மணிக்கு, கடையில் இருந்து புகை வந்தது. சில நிமிடத்தில் கடையில் தீப்பிடித்தது. கிண்டி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.