/உள்ளூர் செய்திகள்/சென்னை/சுருக்கப்பட்ட சாலையில் பள்ளத்தால் அவதிசுருக்கப்பட்ட சாலையில் பள்ளத்தால் அவதி
சுருக்கப்பட்ட சாலையில் பள்ளத்தால் அவதி
சுருக்கப்பட்ட சாலையில் பள்ளத்தால் அவதி
சுருக்கப்பட்ட சாலையில் பள்ளத்தால் அவதி
ADDED : ஜன 25, 2024 12:45 AM

வில்லிவாக்கம், மெட்ரோ ரயில் பணிக்கான சுருக்கப்பட்ட சாலையில் உள்ள பள்ளத்தால் நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர்.
வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. இதற்காக, நியூ ஆவடி சாலை முதல், பாடியை நோக்கிச் செல்லும் சாலையில், நாதமுனி சிக்னல் வரை சாலை சுருக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தெற்கு ஐகோர்ட் காலனி பிரதான சாலையின் அருகில், ஆழமான பள்ளம் உள்ளது.
இதனால், மேலும் நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர், பள்ளத்தை சீரமைத்து, நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.