ADDED : ஜூலை 03, 2025 12:36 AM
திருவல்லிக்கேணி, உலக நன்மைக்காக, திருவல்லிக்கேணி அகோபில மடத்தில், மூன்று நாள், விசேஷ திருமஞ்சன, சுதர்ஷன ஹோமம் நாளை துவக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணியில் அகோபில மடம் அமைந்துள்ளது. அங்கு உலக நன்மைக்காகவும், சுதர்ஷன ஜெயந்தியை முன்னிட்டும், மடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், சுதர்ஷன ஆழ்வாருக்கு மூன்று நாட்கள் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல், சுதர்ஷனர் திருமஞ்சனமும், மாலை சகஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை லட்சுமி நரசிம்ம திருமஞ்சனம், மாலை சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. 6ம் தேதி காலை, சுதர்ஷன மகாயக்ஞம் நடக்கிறது.